பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை! நிலையில் தடுமாறும் தமிழக அரசு!

0
170

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றன. 

ஆனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை வருகிற 30-ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது தொடர்ந்து கேள்வியாகவே உள்ளது.

சமீபத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களின் ஆலோசனை பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

அதனை அடுத்து தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அவரவர் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு செல்லலாம் என்று தமிழ்நாடு அரசும் அறிவித்தது. இதற்கான செயல்பாட்டு நிலையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வரலாம் என்று கூறிய அரசு திடீரென ஆன்லைன் வகுப்புகள் வகுப்புகள் நடைபெறும் என்றும், சந்தேகங்களை வீட்டிலிருந்தே கேட்டார்களாம் என்றும், அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கி  மாணவர்களின் குழப்பத்தை அதிகரித்தது.

கோபிசெட்டிபாளையம் அருகில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,” பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர்களின் சம்மத கடிதத்துடன்தான் பள்ளிக்கு வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது என்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.