கோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்க போகிறதா? மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

0
123

கொரோனா காரணமாக கோயம்பேடு காய்கறி கடை, மலர் சந்தை கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள தமிழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டு வியாபாரம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி கொண்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் கோயம்பேடு சந்தையையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து கோயம்பேடு சந்தை செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு. கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்படுவதால் தமிழிசை சந்தை மூடப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை திறக்கப்பட உள்ளதால் நேற்று நள்ளிரவில் கோயம்பேடு காய்கறி மற்றும் மலர் சந்தை திறக்கப்பட்டு விட்டதாம்.மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும், கலர் வியாபாரத்திற்கு கிடையாது என்றும் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

தமிழக அரசு வாடிக்கையாளர்களின் வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும், கிருமி நாசினிகளை கடைகளில் வைத்திருப்பது, வெப்ப சோதனைகளில் ஈடுபடுவது போன்ற சில கட்டுப்பாடில் அடிப்படையில் திறக்கப்பட்டது கோயம்பேடு மார்க்கெட். இதனால் வியாபாரிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleஒரே நாடு.. ஒரே ஆர்.சி. புக்.. ஒரே ஓட்டுநர் உரிமம்..! அக்டோபர் 1 முதல் புதிய மாற்றங்கள்..!! மத்திய அரசு!
Next articleஇத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா!