வாய்க்கால் நிரம்பி வயலில் தண்ணீர் சென்றதனால் விவசாயிகள் போராட்டம் :!

Photo of author

By Parthipan K

மயிலாடுதுறைஅருகே வாய்கால் நிரம்பி விவசாயிகளின் நிலத்தில் தண்ணீர் புகுந்து 50 ஏக்கர் நிலம் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே பரமக்குடியில் செல்லும் கஞ்சநகர் வாய்க்கால் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, பின்ன்ர் வாய்க்கால் மூலம் மணக்குடி அகரமாங்குடி பகுதியில் வடிகால் வாய்க்கால்களை கஞ்சா நகர் மற்றும் கரூர் குளித்தலை மிட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாசன வாய்க்கால்களும் அமைக்கப்பட்டு தண்ணீர் செல்கிறது.

இதில் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, இரண்டு கிலோமீட்டர் தூரம் துருவ படாமல் அப்படியே விட்டு விட்ட நிலையில் உள்ளது.

இதனால் கஞ்சாநகரம் பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீரானது முழுமையாக வாய்க்காலில் செல்ல முடியாமல் வலிந்து அகரமாங்குடி கிராமத்தின் உள்ள விளை நிலங்களில் சென்றுள்ளது.

இதனால் 50 ஏக்கரில் நடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது நிலை அரங்கேறியுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்களாக தண்ணீர் வயல்வெளிகளில் வரவில்லை என்பதனால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.

மேலும் இதுகுறித்து புகார் கொடுத்தும் பொதுப்பணித்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடிகளை ஏந்தி தண்ணீர் சூழ்ந்த விவசாய நிலங்களில் நேற்று இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது அவர்கள் 100 ஏக்கர் வரை விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடப்பதாகவும், உடனடியாக வாய்க்காலை முழுமையாக தூர்வார பணியில் அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களையும் எழுப்பினர்.