இந்திய நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை மின்வசதி பெறாத சிறு வாட்டுக்காடு மலை கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடக்காடு ஊராட்சியில் சிறுவாட்டுகாடு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது.இந்தியா சுதந்திரமடைந்த பின்பு கூட, இந்த கிராம மக்களுக்கு மின்சார வசதி எதுவும் ஏற்படுத்தித் தரவில்லை. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.ஆர் சக்கரபாணி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து, இம்மலை கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்க மாநில மின்சார சமச்சீர் நிதியிலிருந்து ரூபாய் 120 கோடியை ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் ,இதற்கான பணிகள் தற்பொழுது வெகு விரைவில் நடைபெற்று வருகின்றது.இது தொடர்பான பணிகள் குறித்து நேற்று எம்எல்ஏ ஆர் சக்கரபாணி பார்வையிட்டார்.இதற்கு முன்பு, இந்த மலை கிராம மக்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்பொழுது இந்த கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணியும் நடைபெற்று இருக்கிறது.
மேலும் இது தொடர்பாக அர.சக்கரபாணி எம்எல்ஏ அவர்கள் கூறுகையில், சிறு வாட்டுகாடு மலை கிராமத்தில் இந்தியா சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு, மின்சார இணைப்பு ஏற்படுவதற்கான நடைமுறை பணிகள் நிறைவு பெற உள்ளதாகவும், சில தினங்களில் கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.மேலும் இந்த பணியை மாவட்ட கவுன்சிலர் சங்கீதா மற்றும் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடன் மேற் பார்வையிட்டனர்.