இன்று முதல் நாடு முழுவதும் ஒரே ஓட்டுநர் உரிமம் அமல்படுத்தப்படுகிறது.
ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமங்கள் கியூ ஆர் கோட் மற்றும் மைக்ரோசிப் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . வாகன பதிவுகளின் காகிதமில்லா முறையை செயல்படுத்தப்படும் என்றும், புதிய ஆர்.சி.புத்தகத்தில் உரிமையாளர்களின் பெயர் கொண்டு முன்பக்கத்தில் மைக்ரோ சிப் மற்றும் க்யூ ஆர் கோடு குறியீடு பின் பக்கத்திலும் அமைந்திருக்கும்.
இதனால் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும்.டெபிட் கார்டுகள் மற்றும் பேமெண்ட் முறையை பயன்படுத்தினால் மட்டுமே வழக்கமாக கிடைக்கும் சலுகைகள் தொடர்ந்து பெரு நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும். அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் வீட்டுக் கடன். வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வங்கிகளின் குறைந்தபட்ச தொகை , மெட்ரோ மற்றும் புறநகர்களில் ரூபாய் 3000 ஆகவும்,கிராமபுரங்களில் ரூபாய் 1000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் உணவு தயாரிக்கும் விவரங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எழுதி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் காப்பீட்டு குறித்து வாடிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சையை உள்ளடக்கிய காப்பீட்டு வசதி பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு புதிய விதிகளை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய நடைமுறைக்கு இன்று முதல் அமல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.