துணை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

0
71

துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் (B.Sc. Nursing), பி.ஃபார்ம் (B.pharm), ரேடியோ டெக்னாலஜி (Radio Technology), ரேடியோ தெரபி (Radio Therapy), அனஸ்தீசியா (Anaesthesia), கார்டியாக் டெக்னாலஜி (cardiac Technology) உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நடப்பாண்டில் (2020 – 21) சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மாணவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அக். 15ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக். 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்த பின்னர், அதை நகல் (print out) எடுத்து உரிய சான்றிதழ்களுடன் அக். 17ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக் குழு செயலாளருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.