மருத்துவமனையில் இருந்து வந்த நல்ல செய்தி..!! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!!

0
137

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாஆகியோரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் அவரது மனைவியும், தேமுக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கடந்த 28ம் நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இருவரின் உடல் நிலையும் சீராக உள்ளது என மருத்துவமனை அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் மருத்துவக் குழுவினரால் தொடர் மதிப்பீட செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தன் மூலம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Previous articleதடைகளை மீறி நடத்தப்பட்ட  கிராமசபை கூட்டம் !!
Next articleநீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!