Google மூலம் சம்பாதிக்கலாம்! சுந்தர் பிச்சை வெளியிட்ட செய்தி!

Photo of author

By Kowsalya

இனி நீங்களும் கூகுள் மூலம் சம்பாதிக்கலாம் என கூகுளின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இன்று கூகுள் என்றால் தெரியாதவர்களே கிடையாது. எதை தேடினாலும் கூகுளில் கிடைத்துவிடும். அனைவருக்கும் ஒரு சிறந்த தேடுதலுக்கான ஒரு இடமாக விளங்கி வருகிறது என்பதில் ஐயமில்லை.

பாட சம்பந்தமாக, அறிவியல் சம்பந்தமாக, சமூகம், அரசியல், வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியம் எதை நீங்கள் தேடினாலும் அதற்கேற்றவாறு செய்திகள் படாரென்று வந்து நிற்கும்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் கூகுள் இணையதளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதிஉதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் சில்லரை விற்பனையாளர்கள் இலவசமாக விளம்பரம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செயல்முறையானது அக்டோபர் பாதிக்கு மேல் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கூகுள் நியூஸ் ஷோகேஸ் என்ற அமைப்பினை உருவாக்கி இருப்பதாகவும் முதலில் ஜெர்மனியில் தொடங்கப்பட்டு பின் அனைத்து நாடுகளிலும் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.