ரயில் முன்பதிவு குறுஞ்செய்தி ஹிந்தியில் வந்ததற்கு திமுக எம்.பி கண்டனம் !!

0
115
IRCTC
IRCTC

ரயில் டிக்கெட்டுகளை புக் செய்யும் பொழுது பயனாளர்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தியாக வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு ரயில் பயணிகள் நலசங்கள் சார்பில், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரயில் டிக்கெட்கள் தொடர்பான குறுஞ்செய்தியை ஆங்கிலத்தில் அனுப்பி வைத்த நிலையில், தற்போது இந்தியில் வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன் அதனை உறுதிப்படுத்தும் வகையில் குறுஞ்செய்தியாக இந்தியில் வருகிறது .ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு ஹிந்தி தெரியாது.

இதனை மத்திய ரயில்வே துறை அமைச்சகம் கருத்தில் கொண்டு, அந்தந்த மாநில மொழிகளில் குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என  வேண்டுகோள் விடுத்தார்.

https://twitter.com/ThamizhachiTh/status/1312599096729849856?s=20

மேலும், மத்திய அரசிடமிருந்து செயல்படும் அனைத்து இணைய தளத்திலும், இந்தியைத் திணித்து மக்களை கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநிலங்களின் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleதேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!
Next articleகீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!