சிகரெட் புகையிலை குட்கா போன்ற பொருளை பயன்படுத்துபவர்கள் இந்த ஊருக்கு வர தடை :! ஊர் பொதுமக்கள் உத்தரவு !!

0
113

சாயல்குடி அருகே காலடி ஒன்றியம் புதுக்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் ஆடு வளர்த்தல் போன்ற தொழில்களுக்கு சென்று வருகின்றனர்.இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலானோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள பொட்டி கடையிலே சீக்ரெட், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்கவும் ,மது போன்ற  உடலுக்கு தீங்காகும் பொருட்களையும் கிராமத்துக்குள் பயன்படுத்த தடைவிதித்துள்ளனர்.இதனை அறியும் வகையில் கோவில் ஒலிபெருக்கி மூலம் தகவல்களை சொல்லியும், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தும்  வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக அந்த கிராம மக்கள் கூறுகையில், கிராமத்தில் விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.இவை கருத்தில் கொண்டு சிகரெட், மது, புகையிலை ,குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்க மற்றும் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து  கிராம கூட்டத்தில் முடிவு செய்து அதனை தீர்மானமாக இயற்றி உள்ளதாக கூறினார்.

மேலும் கோவில் திருவிழா திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகள் முதல் இறப்பு நிகழ்ச்சிகள் வரை வெளியூரிலிருந்து வரும் மக்களும் இந்த தடையை பின்பற்ற வேண்டும் என்பதை ஆரிய  அவர்கள்  விழிப்புணர்வு வாசகத்தை நோட்டீஸ் ஆக ஊர் எல்லையில் ஒட்டியுள்ளனர்.

Previous articleகீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!
Next articleதமிழகத்தில்  இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!