கீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!

0
180

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் புகழ்பெற்று நடித்து வந்தவர் மிஸ்டி முகர்ஜி. இவர் நேற்று சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய கீட்டோ டயட் முறையே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தி, பெங்காளி படங்கள், இசை வீடியோக்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான லைஃப் கி தோ லக் கயி படம் மூலம் மிஷ்டி முகர்ஜி பாலிவுட்டில் அறிமுகமானார். கிரேட் கிரண்ட் மஸ்டி , பேகம் ஜான், மணிகர்ணிகா போன்ற பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து மக்களின் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தார்.

மிஸ்டி முகர்ஜி உடல் எடையை குறைப்பதற்காக கீட்டோ டயட்டை பின்பற்றி வந்தார் என தெரிய வந்துள்ளது.

இந்த டயட் முறையால் சிறுநீரகம் பாதிப்படைந்து மிகுந்த வலியை அனுபவித்துள்ளார். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று  பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை மிஸ்டி முகர்ஜி இறந்து உள்ளார். இந்த சிறுநீரக பிரச்சனைக்கு அவர் பின்பற்றி வந்த டயட் முறையை காரணம் என்று கூறப்படுகிறது.

இளம்வயதிலேயே உயிரிழந்த மிஷ்டி முகர்ஜியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Previous articleரயில் முன்பதிவு குறுஞ்செய்தி ஹிந்தியில் வந்ததற்கு திமுக எம்.பி கண்டனம் !!
Next articleசிகரெட் புகையிலை குட்கா போன்ற பொருளை பயன்படுத்துபவர்கள் இந்த ஊருக்கு வர தடை :! ஊர் பொதுமக்கள் உத்தரவு !!