அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் – என்ன கருத்து தெரியுமா?

0
108

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.  ராணுவ மருத்துவமனையில் அவர் நான்கு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் வெள்ளை மாளிகையை வந்தடைந்தார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அதிபர் டிரம்ப்  அமெரிக்க மக்களுக்கு கொரோனா தொற்றை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். தற்போது தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் “கொரோனா தொற்று என்பது, பருவ காலங்களில் வரும் காய்ச்சல் அளவிற்கு மோசமானது இல்லை” என்று டிரம்ப் பதிவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிபர் டிரம்ப் பதிவிட்டு இருந்த  கருத்தை பேஸ்புக் நிறுவனம், ‘இந்த கருத்து நிறுவன விதிகளை மீறி பதிவிடப் பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும்  அக்கருத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது’.

அதிபர் டிரம்ப் இதே கருத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அதற்கு டுவிட்டர் நிறுவனம் அந்த கருத்தை நீக்கவில்லை, ஆனால் இக்கருத்து தவறானது என்று மட்டும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி !!
Next articleதேமுதிக கட்சி விஜயகாந்திற்கு சிகிச்சை – மியாட் மருத்துவமனை தகவல்!