தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!

0
89

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், விண்ணப்பதாரர்கள் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் செம்மொழியான சமஸ்கிருதம் ,பாலி, பிராகிருதம், போன்ற மொழிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ,செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை எதிர்த்து ,மதுரை உயர் நீதிமன்றத்தில் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் மத்திய அரசின் தொல்லியல் படிப்பில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதனை கண்டித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.மத்திய அரசின் தொல்லியல் பிரிவு படிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியுள்ளனர் .அதனை ஏற்ற நீதிபதிகள் முறைகேட்டை மனுவாக தாக்கல் செய்தால், நாளை அவசர விசாரணையாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தொல்லியல் படிப்பிற்கான அறிவிப்பை ரத்து செய்து, செம்மொழி வரிசையில் தமிழையும் சேர்த்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவானது நாளை அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.