ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்த தமிழக அரசு முடிவெடுத்து, கைவிரல் ரேகையை அங்கீகாரமாக பெற்று ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தில் இத்திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு,ரேஷன் கடைகள் மட்டுமின்றி ,பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை கொள்ளப்பட்டது.
ஆனால், ரேஷன் கடைகளில் கைரேகை முதுநிலை அங்கீகாரம் கொண்டு பொருட்கள் வழங்க முடிவு செய்த நிலையில் கைரேகை சரியாக விழத காரணத்தினாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் ரேஷன் பொருட்கள் சரிவர வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்குவது சிக்கலாக இருப்பதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு, ஆதார் எண் வைத்து பொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளது.
ஆதார் எண்ணுடன் இணைத்த ரேஷன் கார்டுகள் ஆதார் ஸ்கேன் செய்து (OTP), ஆதார் எண் கைப்பேசிக்கு அனுப்பப்படும்.அதனை உறுதிப்படுத்தி பொருட்கள் வாங்கலாம்.ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, ரேஷன் அட்டைதாரர்கள் பதிவு செய்த செல்போனுக்கு OTP அனுப்பும் முறை ,மின்னணு ரேஷன் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை,ஆகியவற்றைக் கொண்டு ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தற்பொழுது பரவிவரும் கொரோனா நோய்த் தொற்று உள்ள நிலையில், பயோமெட்ரிக் முறையானது தேவையில்லாத ஒன்று என்றும், இதனால் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.