பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

0
91

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி  கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று ஐந்தாவது நாளாக ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல முகங்கள் பங்கேற்றுள்ளனர்.

அதாவது அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புதுமுகங்கள் கூட கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் சம்யுக்தா பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. சம்யுக்தா மாடலிங் மற்றும் நடனத்தின் மீது ஈர்ப்பு கொண்டவராம். இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மேலும் இவர் ஒரு இன்டர்நேஷனல் சலூன் சென்னையில் நடத்தி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதையடுத்து சம்யுக்தா, பிரபல தொகுப்பாளினியான பாவனாவின் தோழி என்பது பலரும் அறிந்திராத ஒன்று. அவருடன் இணைந்து சம்யுக்தா நடனமாடிய வீடியோ பாவனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் சமித்தா முதலில் ராதிகா சரத்குமாரின் ‘சந்திரகுமாரி’ சீரியல் நடித்துள்ளார் என்ற எவருமே அறிந்திராத தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர் அதில் ராஜகுமாரி ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா எதுவரை தொடர்வார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.