உங்கள் வீட்டில் உள்ள தங்கம் எங்கும் போகாமல் உங்களிடமே நிலைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!

0
143

நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க நாம் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும். அப்படி நம் வீட்டில் தங்கம் இருந்தால் லட்சுமி கடாட்சமும், மன நிறைவு, அமைதி என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்கும்.

ஆனால் தங்கம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் பணக்காரர் என்று சொல்லிவிட முடியாது.

 

கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி பாதுகாத்து கொள்ளுவார்கள். தங்கத்திற்கு ஆசை படாதவர்கள் யாரும் கிடையாது. காசு இல்லாதவர்கள் கூட அவர்களின் பிள்ளைகளுக்கு தங்கத்தை சேர்த்து வைப்பார்கள். ஒரு துளி குண்டுமணி தங்கம் ஆவது உடலில் இருக்க வேண்டும் என முன்னோர்கள் சொல்வார்கள். காரணம் இல்லாமல் அவர்கள் எதும் சொல்லமாட்டார்கள்.

ஏன் தங்கம் ?

தங்கத்திற்கு நேர்மறை எண்ணங்களை கொடுக்கும் சக்தி உள்ளது. அதனால்தான் கோவிலில் உள்ள கோபுரங்கள் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் நீங்கள் கோவிலுக்குள் செல்லும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் நீங்கி புது உணர்வு ஏற்படும் காரணம் அது தான்!

அதே போல் தங்கத்திற்கு தோசங்களை நீக்கும் சக்தி உள்ளது. உங்கள் முன் மற்றவர்கள் கெட்ட எண்ணத்தோடு உங்களை பற்றி நினைத்து பேசினால் அந்த தங்கம் எதிர்மறை எண்ணங்களை தனக்குள் உள்வாங்கி கொள்ளும் . அது உங்களை பாதிக்காது.

என்னதான் மற்றவர்கள் தங்க நகை போட்டிருந்தாலும் மற்றவர்கள் போட்டு உள்ளதை கண்டால் பொறாமை பொங்கும். இப்படிப்பட்ட கண்திருஷ்டியை கொண்ட நகைகள், சிலசமயங்களில் நம்மிடம் தங்காமல் போய்விடும்.

மற்றவர்களின் பொறாமை குணத்தில் இருந்து தப்பித்து நம் தங்கம் நம்மிடமே தங்க என்ன செய்ய வேண்டும்?

ஏதாவது கல்யாணத்திற்கு அல்லது மற்ற விசேசத்திற்கு தங்க நகையை நீங்கள் அணிந்து கொண்டு சென்றிருந்தாலும் அந்த தங்க நகைகளை கொஞ்சம் கோமியம் கலந்த தண்ணீரில் கழுவி விட்டு மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி, நன்றாக துடைத்து விட்டு உலர வைத்து, மீண்டும் ரொம்ப பத்திரமாக எடுத்து பெட்டியில் பூட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு கப் தண்ணீரில், இரண்டு ஸ்பூன் கோமியம் ஊற்றினால் கூட போதுமானது. தங்கத்தில் உள்ள தோஷம் நீங்கிவிடும்.

இப்பொழுது கோமியம் கடைகளில் கூட கிடைக்கிறது. அருகில் மாடு வைத்திருந்தால் கூட நேரடியாக வாங்கி பயன்படுத்துங்கள்.

முடிந்தால் கடவுளுக்கு சுவர்ண அபிஷேகம் செய்யும் பொழுது தங்க நகைகளை கொடுக்கலாம். மிகவும் நல்லது.

குடும்பத்தில் உள்ளவர்களை தவிர்த்து, அடுத்தவர்கள் அணிந்துகொள்ள இரவலாகக் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

 

 

 

Previous articleஇந்த ராசிக்கு இன்று பழைய பாக்கி வசூலாகும் இன்றைய ராசி பலன் 10-10-2020 Today Rasi Palan 10-10-2020
Next articleஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை குறைக்கும் இயற்கை வழிமுறை!