வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
211

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலம் நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மகனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
Next articleமேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here