இந்தியாவில் 86.16% பேர் குணம்! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
184

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,53,807 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 918 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89,154 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 60,77,979 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 86.16% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 8,67,496 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 10,78,544 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 8,68,77,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleமேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!
Next articleகிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here