இந்தியாவில் 71 லட்சத்தை தாண்டிய பாதிப்பு! அக். 12 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
192

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,20,539 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 816 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,09,150 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 61,49,536 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 8,61,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 9,94,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 8,78,72,093 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஅக். 12 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!
Next articleநாஞ்சில் விஜயனை தாக்கிய சூர்யா தேவி! காயங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here