நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு !!

Photo of author

By Parthipan K

மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வானது திட்டமிட்டபடி கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளை வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடைகோரி மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீடு குறித்து கமிட்டி பரிந்துரை அமல்படுத்திய பிறகே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று அவசர வழக்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.