மாஸ்டர் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்! திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது!

0
85

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தளபதி விஜய். இவருக்கு என்றே தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு.

மேலும் இவரின் படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும் நாட்கள் எல்லாம் ஒரு திருவிழா நாளை போலவே காணப்படும். அந்த அளவுக்கு விஜய் வெறியர்கள் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாக தொடர்ந்து தடை நீடித்து வருவது தளபதி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

அதாவது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் மாஸ்டர்.

இந்தப் படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

மேலும் தற்போது தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அக்டோபர் 20ஆம் தேதி தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் அளித்துள்ள பேட்டியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகாது என்ற பகீர் தகவலை அளித்துள்ளார்.

அதாவது தற்போது தியேட்டர்கள் திறந்தாலும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே அவை இயங்க அனுமதி அளிக்கப்படும் என்பதால் மாஸ்டர் போன்ற பெரிய படங்களை ரிலீஸ் செய்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தான் நிச்சயம் ஏற்படும்.

இதனைக் கருத்தில் கொண்டே சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதைக் கேள்வியுற்ற விஜய் ரசிகர்கள் செம டென்ஷனாகி உள்ளார்கள்.