3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டாரா..?

0
121

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பணி புரிந்தவர் சவுமியா பாண்டே. இவர் சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, கர்ப்பிணியாக இருந்த சவுமியா பாண்டேவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவ கால விடுப்பு எடுக்காமல், பெண் அதிகாரி சவுமியா பாண்டே தன் பணிகளை மேற்கொள்ள 3 வார கால கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார்.

சவுமியா பாண்டே தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு கையெழுத்திடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் பெண் அதிகாரி சவுமியா பாண்டேவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், சரியான ஓய்வுக்கு பிறகு பணிக்கு வர வேண்டும் என்று அன்பான அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அதிகாரி சவும்யா பாண்டே, காஷிபாத்தில் இருந்து கான்பூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது வழக்கமான பணிமாற்றம் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஇன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!
Next articleஇந்த ராசிக்கு இன்று மன உறுதி பிறக்கும்! இன்றைய ராசி பலன் 17-10-2020 Today Rasi Palan 17-10-2020