இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில் தேர்வு முடிவுகள் நிக்கப்பட்டது.
nta.ac.in என்ற இணையதளம் மூலம் வெளிவந்த தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருந்தனர். திரிபுரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருப்பதும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட , தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் குறைவாகவும் இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், தனிப்பட்ட தேர்வு முடிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது . மாநிலங்களில் வெளியிடும் புள்ளி விவரங்களில் குளறுபடி காரணமாக தற்போது நீக்கப்பட்டிருப்பதாக கூறிய நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடியை சரிசெய்து திருத்தப்பட்ட பட்டியலை தற்போது தேசிய தேர்வு முகமை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.