தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் எச்சரிக்கை !!

0
168

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த 15 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த 15 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்ற ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர் ,ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, தேனி ,விழுப்புரம் ,திருச்சி ,கடலூர் ,கள்ளக்குறிச்சி ,புதுக்கோட்டை ,கரூர் ,திண்டுக்கல் ,அரியலூர் ,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  சென்னை பகுதியை பொருத்தவரை புறநகர்  மற்றும் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் வல்லம் மற்றும் பெருங்களூர் ஆகிய பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழையும்,  கீழ்பென்னாத்தூர் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும் ,தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Previous articleநகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!
Next articleDegree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!