திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!

0
211

மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவரின் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleநியாயமான போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது…….! கே.ஸ்.அழகிரி ஆவேசம்…..!
Next articleமுதல்வரை சந்தித்த எல்.முருகன்……! பாஜகவின் அடுத்த திட்டம் என்ன …….!!!!?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here