விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் …..! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்…..!

0
120

கேரளா மாநிலம் பாலக்காட்டில் விஷம் கலந்த மதுவை குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் உள்பட மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் அமைந்திருக்கும் பழங்குடியினர் காலனியில் 30 குடும்பங்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை அந்த பகுதியை சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மது குடித்து உள்ளனர்.

அப்போது மது அருந்திய ஒருசில மணி நேரத்தில் மது அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஆகியவை ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில் இன்று காலை மேலும் இரண்டு பேரும் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர் இதனைத் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் உள்பட 12 பேர் பாலக்காடு அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் அதில் ஒருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பாலக்காடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார் அந்த விசாரணையில் பழங்குடியினர் குடித்த மதுவில் கிருமி நாசினி கலந்து இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர் இறந்து போனவர்களை உடற்கூறு ஆய்வு செய்தாள் உயிரிழப்பு காண காரணம் தெரிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார் இதனிடையே சம்பவ இடத்தில் கேரள மதுவிலக்கு காவல்துறையினரும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Previous articleதமிழகத்தில் 6.90 லட்சம் பேர் பாதிப்பு! அக். 19 கொரோனா பாதிப்பு நிலவரம்!!
Next articleஆதார் ஆணையம் கைவிரிப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?