பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்கள் அனைவரிடமும் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்” என்னும் தகவலை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமன்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரியப்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அது என்ன செய்தி என்பது குறித்து எந்த விதமான தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.
அத்துடன் பிரதமர் மோடி தனது உரையாற்றலை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயம் கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் பிரதமர் மோடி எதை பற்றி பேசப் போகிறார் என்பதை அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா காரணமாக பலமுறை நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்தியுள்ளார் மோடி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல வழிமுறைகள், கொரோனாவுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு என பலவற்றை மக்களுக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதே.