TET சான்றிதழ் குறித்த புதிய திருத்தம் – NCTE அறிவிப்பு!

0
136

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழு உடைய பொது அதிகாரிகள் ( General body of NCTE ) அப்போது ஒரு முடிவு எடுத்துள்ளனர். அது என்னவென்றால் டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, அவர்களின் ஆயுட்காலம் வரை செல்லுபடியாகும் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். அந்த சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் தற்போது இந்த சான்றிதழை ஒருவர் பெற்றால் அவர் ஆயுட்காலம் வரை செல்லுபடியாகும் எனற திருத்தத்தை NCTE கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த புதிய முடிவு அமலுக்கு வர உள்ளது. ஆனால் ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு ஆயுட்காலம் வரை சான்றிதழ்களை நீடிக்க சட்ட ஆலோசனை நடத்திய பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் என்சிடிஇ அறிவித்துள்ளது.

ஏற்கனவே 80 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் டெட் தேர்வு எழுதி, சான்றிதழ்களை ஆயுட் காலம் வரை நீட்டிக்க கோரி வலியுறுத்தி வரும் இந்த நிலையில், என்சிடிஇ இந்த புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Previous articleஅதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!
Next articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 22-10-2020 Today Rasi Palan 22-10-2020