இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தாக்கம்! அக். 22 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
209

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 55,838 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,06,946 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 702 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,16,616 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,415 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 68,74,518 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 89.20% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 7,15,812 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 14,69,984 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 9,86,70,363 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleமக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் மத்திய அரசு…! காங்கிரஸ் கடும் தாக்கு….!
Next articleகாதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here