சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ள 3 சிறப்பு ரயில்கள்! முழு விவரம்!

0
134

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கொல்லம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில், பேருந்து, விமானம் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பண்டிகை காலம் நெருங்கி வர இருப்பதால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அக். 20ம் தேதி முதல் நவ. 30 தேதி வரை திருவிழா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கொல்லம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள்:
தஞ்சாவூர்-சென்னை எழும்பூர், சிறப்பு ரயில் (06866)
தஞ்சாவூரில் இருந்து வரும் 26ம் தேதி முதல் தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும்.

சென்னை எழும்பூர் – தஞ்சாவூர், சிறப்பு ரயில் (06865)
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 27ம் தேதி முதல் தினசரி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

சென்னை எழும்பூர் – கொல்லம், சிறப்பு ரயில் (06101)
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 25ம் தேதி முதல் தினசரி மாலை 5 மணிக்கு புபுறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லம் – சென்னை எழும்பூர், சிறப்பு ரயில் (06102)
கொல்லத்தில் இருந்து வரும் 26ம் தேதி முதல் தினசரி மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.

சென்னை எழும்பூர் – திருச்சி, சிறப்பு ரயில் (02653)
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 27ம் தேதி முதல்  தினசரி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

திருச்சி – சென்னை எழும்பூர், சிறப்பு ரயில் (02654)
திருச்சியில் இருந்து வரும் 26ம் தேதி முதல் தினசரி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (அக். 24) காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

Previous articleமுதல்வர் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை…! தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க திட்டம்…?
Next articleBank – இல் வேலை! Bachelor’s degree போதும்! உடனே apply பண்ணுங்க!