சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அதிரடி அறிவிப்பு! 8-வகுப்பு முடித்தவர்களுக்கு கடனுதவி !

0
110

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி 8-வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க 25% மானியம் கொண்ட வங்கி கடன் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தியானது:

தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு முதல் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்படி செய்யும் தொழில் கேற்ப வங்கி கடன் பெறலாம். அதில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ-10 லட்சமும்,சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு ரூ5 லட்சமும் பெறலாம் என்று கூறப்பட்டது.

இந்தக் கடன் பெறுவதற்கு தகுதி 8-வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ-5 லட்சத்துக்கும் இருக்க வேண்டும்.

இந்தக் கடன் பெறுவதற்குவயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 35 ,இடஒதுக்கீடு பிரிவினர் (பிசி,எம்பிசி,எஸ்சி,எஸ்டி),மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 45 வயதும்,இதற்கு 25%மானியமும் உண்டு.

மேலும் உற்பத்தி சேவை விற்பனைத் தொழில் செய்ய விரும்பும் மேற்கொண்ட www.msmeonline.tn.gov.in/uyegp தகுதியை பூர்த்தி செய்யும் நபர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் மற்றும் வணிகத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 9487239561என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு !! ஆய்வு மையம் எச்சரிக்கை .!!
Next articleநீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!