பெங்களூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழையின் காரணமாக ஒசகெரேஹெள்ளி பகுதியிலுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது. அப்போது வெள்ள நீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை மீட்ட சம்பவ வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
https://twitter.com/priyathosh6447/status/1319675236317417473?s=20
நேற்று முன்தினம் காலை முதலே பெங்களூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.மாலை 5 மணி அளவில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் மைசூர் சாலை, கோரமங்களா, ஒசகெரே ஹள்ளி,பீனியா,மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கன மழையில் சிக்கியது.
https://twitter.com/priyathosh6447/status/1319685496377733121?s=20
இதனால் அந்த பகுதியில் உள்ள 200 -க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள அத்தியவசிய பொருட்களாக உணவு, காய்கறிகள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.மேலும் அந்த பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கவி சித்தேஸ்வரர் கோயிலிலுள்ள சுற்றுசுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.
ஒசகெரேஹள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற தத்தாத்ரேயா கோவிலிலும் மழை நீர் புகுந்தது இதனால் சாமி சிலைகளும் மூழ்கியது.
இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் பட்டினியாக தவித்து வருகின்றனர்.