நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சாதனை! 1952 இற்கு பிறகு மீண்டும் இப்பொழுதுதான்!

0
85

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 17 ஆவது மக்களவையில் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளார். இவர் தலைமையில் பல மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் மட்டும் இதுவரை 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு 17வது மக்களவை சிறப்பாக தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. பல நல்ல திட்டங்களை மோடி அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

30 மசோதாக்கள் என்பது, 1952 ஆம் ஆண்டுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனையாக இது கருதப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, தீவிரவாத செயல்கள் தடுப்பு மசோதா போன்ற பல முக்கிய மசோதாக்கள் மோடி தலைமையில் கடந்த சில நாட்களில் நிறைவேறியுள்ளன.

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, செய்தியாளர் சந்திப்பில் கூறியது. மோடி தலைமையில் நாடாளுமன்றம் சுமுகமாக இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மக்களின் குறைகளை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாக கூறிய அவர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாட்டு நலனை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 

1952 ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்த்தப்பட்ட இந்த 30 மசோதாக்களை அரசு தரப்பில் பெருமையுடன் கூறிவருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்