இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பலி!

0
130

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 45,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,09,959 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 480 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,19,014 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 59,108 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 71,37,228 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 90.23 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 6,53,717 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 9,39,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10,34,62,778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleபெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா…? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்…!
Next articleதிரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்தின் தலைப்பு ருத்ர தாண்டவம்