மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தொழில்நுட்பம் சார்ந்து ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமானது ,கணினிக்கு தேவையான பல பொருட்களை தயாரித்து, அதனை மேம்படுத்தும் மற்றும் அதன் உரிமை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது . தற்பொழுது பயன்பாட்டில் உள்ள எச் பிரவுசர் (Edge Browser) சேவையை அதிகரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் ஏச் பிரவுசர் (Internet Edge Browser) செயலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உள்ள 365 சேவைகள் எதுவும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11( Internet explorer) செயல்படாது என்று அறிவித்துள்ளது.மேலும் இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட் டீம்ஸ் வெப் செயலியும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் லெவலில் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது.
மேலும் ,இந்த செயலி நிறுத்தத்தினால் எந்த விதமான தாக்கம் ஏற்படும் என்று அதன்பின்னரே காணிக்க முடியும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.