கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பும் என்றும் நம்பப்படுகிறது.
எரிசக்தி சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியதாவது : “இந்தியாவின் ஜிடிபி பூஜ்யம் அல்லது அதற்கு எதிர்மறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்பதனை தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியாவும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.