பீகார் மாநில சட்டசபை தேர்தல்…! ராகுல் காந்தி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர்…!

0
139

வேலைவாய்ப்புகளுக்காகவும், நீதிக்காகவும் விவசாயிகளான உங்கள் வாக்கு இருக்க வேண்டும் என்று தனது வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றார் ராகுல்காந்தி. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிற்கு இடையில் கடுமையான பாதுகாப்பு, மற்றும் விதிமுறைகளுக்கு, உட்பட்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது ஒருவனா ஊரடங்கு காலத்தில் நடைபெறுகின்ற முதல் தேர்தல் இது என்பதால் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது. அதேபோல வாக்குச்சாவடிகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, வாக்களிக்க வருபவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு வருகின்றது, இன்று காலை 7 மணி முதல் 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

வாக்குபதிவு ஆரம்பித்தது முதலே மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள். அதேபோல அரசியல் தலைவர்கள் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். அதேசமயம் அந்த மாநிலத்தின் மக்கள் தங்களுடைய வாக்குரிமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு தலைவர்களும் வாக்காளர்கள் பாதுகாப்புடன் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றார்கள்.

இதற்கிடையில் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஒருபடி மேலாக சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போதுகூட, தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் தன்னுடைய வலைதள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கின்றார், இது எதிர்க்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் எல்லா விதிமுறைகளை மீறும் வகையிலான நீதி வேலைவாய்ப்பு விவசாயிகளுக்காக இம்முறை உங்களுடைய ஓட்டு பெருங்கூட்டணிக்கு மட்டும் தான். எனவும் பீகார் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனவும் அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அவரின் இந்த செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக இருக்கிறது என்று அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா சார்பாக புகார் தரப்பட்டு இருக்கிறது.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில், முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் ஆரம்பித்து நடந்து வருகின்றது. இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட ஆயிரத்து 66 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 80 வயதிற்கு மேல் பட்ட மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதிக்காக தபால் ஓட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. சுமார் 30000 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக 2 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 787 வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக தயார் நிலையில் இருக்கிறார்கள். இந்த தேர்தலில், 31 ஆயிரத்து 380 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

Previous articleஇன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
Next articleதிடீர் திருப்பம்…! நடிகை குஷ்புவை கதறவிட்ட திருமாவளவன்…!