இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
237

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

அதன்படி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் உள்ள கோயிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் சதுரகிரி மலை செல்ல பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், சதுரகிரி மலையில் தங்குவதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஆசை வார்த்தை கூறி…! ஆட்டையை போட்ட அமமுக பெண் நிர்வாகி…!
Next articleபீகார் மாநில சட்டசபை தேர்தல்…! ராகுல் காந்தி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here