சீனாவில் ஒரு முதியவரின் கண்களில் இருந்து 20 புழுக்கள் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் வசிக்கும் வான் என்ற 60 வயது நிரம்பிய முதியவர் சில நாட்களுக்கு முன் கண்களில் ஏதோ ஊர்வது போல உள்ளது என மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த முதியவரின் கண்களில் வலது கண்ணின் இமைக்கு கீழ் 20 சிறிய புழுக்கள் இருப்பதை கண்டுள்ளனர்.
பின் சிகிச்சை செய்து கண்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் எடுக்கப்பட்டன.
பின் இது எவ்வாறு நிகழ்ந்தது என மருத்துவர்களிடம் விசாரித்த பொழுது இந்த மாதிரியான புழுக்கள் விலங்குகள் இடமிருந்து ஒட்டி கொள்ளும்.
அதனால் விலங்குகளிடம் சற்று கவனம் தேவை. சுகாதாரத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.