நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

நந்தா கல்வி நிறுவனம் ஈரோட்டில் உள்ளது, அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சண்முகம் என்பவர் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார்  எழுந்துள்ளது.

நந்தா கல்வி நிறுவனத்திலும்,  அதற்கு சொந்தமான இடங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் இருக்கும் கிளை அலுவலகங்களிலும் வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர். 

அப்போது தலைவர் சண்முகம் என்பவரின் இரண்டு மகன்களிடமும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மாலை தொடங்கிய அந்த சோதனை நள்ளிரவு ஒரு மணி வரையிலும் நடந்துள்ளது. 

அதுமட்டுமன்றி சண்முகம் என்பவரின் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பண்ணை வீடுகளிலும் மற்றும் அவரின் தற்போதைய வீடு உள்பட அனைத்து இடத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

3 குழுக்களாக வருமானவரித் துறையினர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் இந்த அதிரடி சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

Leave a Comment