தமிழ்நாட்டில் ஊரடங்கு இன்றைய தினத்துடன் நிறைவுபெற இருப்பதால், சற்று கூடுதலான தளர்வுகளை அறிவிக்க இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற இருபத்தி எட்டாம் தேதி அன்று மருத்துவ நிபுணர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் ஆலோசனை செய்தார்.
மருத்துவ நிபுணர் குழு, மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள், ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த கட்டமாக என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம், என்று முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது.
இதில் மின்சார ரயில், திரையரங்குகள், போன்றவற்றின் சேவைகளை ஆரம்பிப்பது பற்றிய முடிவு தெரியவரும். என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ,தமிழ்நாட்டில் புது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பை முதல்வர் இன்று அறிவிப்பாரா? என்கின்ற எதிர்பார்ப்பு, எழ தொடங்கியிருக்கின்றது.
எட்டு மாத காலமாக மூடி இருக்கின்ற, திரையரங்குகள், மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை, போன்ற இடங்கள் மறுபடியும் செயல்பட ஆரம்பிக்கும், என்ற அறிவிப்பு இன்று வெளியாகலாம்.
ஆனாலும், மத்திய அரசு சார்பாக, இன்னும் எந்த ஒரு தகவலும் மாநில அரசுக்கு வந்து சேராத காரணத்தால், சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் தொடர்வதற்கான வாய்ப்பு இல்லை, என்று தெரிவிக்கப்படுகின்றது.