இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடத்தும் மாநிலங்கள் சம்பந்தமாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அதனுடைய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ஒரு நீண்ட நிலையான வளர்ச்சியின் அடிப்படையான நிர்வாகத்தின் செயல் திறனை ஆய்வு செய்து இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
அந்த பட்டியலில் கேரள மாநிலம் 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது.
0.912, புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.
0.531, புள்ளிகள் பெற்று ஆந்திரமாநிலம் மூன்றாவது இடத்திலும்,0.468, புள்ளிகள் பெற்று கர்நாடகம் நான்காவது இடத்திலும், இருக்கின்றன முதல் 4 இடங்களை தென் மாநிலங்கள் பெற்றுள்ளன.
சிறு மாநிலங்கள் பிரிவில் கோவா மாநிலம், முதலிடத்தில் இருக்கின்றது மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.மிகவும் பின்தங்கிய மாநிலமாக மணிப்பூர் இருக்கின்றது.
யூனியன் பிரதேசங்களில் சிறப்பான ஆட்சி பெற்ற மாநிலமாக சண்டிகர் மாநிலம் தேர்வு பெற்று இருக்கின்றது. இம்மாநிலம் 1.05 புள்ளிகளை பெற்று இருக்கின்றது. ஜம்மு காஷ்மீர் அந்தமான், ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களில் இருக்கின்றன.