பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை என்பது தேவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதற்காக ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அவருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை எங்களுடையது மு க ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் குறித்து தேவரின அமைப்புகள் மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் இதற்காக மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதுபற்றி தென்னாட்டு மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேவர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழாவிற்கு பசும்பொன் ஆலயத்திற்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் திருமகனார் ஆலயத்தில் கொடுக்கப்பட்ட விபூதியை நெற்றியில் பூசாமல், கீழே கொட்டி தேவர் திருமகனார் மற்றும் ஒட்டுமொத்த தேவர் இன மக்களையும், அவமதித்து இருக்கின்றார்.
தேவர் ஆலயத்திற்கு ஆன்மீக நோக்கத்துடன் வரவேண்டும் ஆனால் அரசியல் சுயநலத்திற்காக தேவரின ஓட்டுகளை பெறுவதற்காக பசும்பொன் கிராமத்திற்கு வருகை தந்த அவரை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி அந்த கட்சியின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தேவர் இன சமூக மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழக மூவேந்தர் பண்பாட்டு கழகம் சார்பில் ஸ்டாலினை கண்டித்து ஒரு கண்டன அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் எங்கள் இன தெய்வமாக வணங்கக் கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் விபூதியை பூசிக் கொள்ளாமல், கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தேவரை அவமதிக்கும் விதமாக, நடந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் செயலுக்கு அகில இந்திய முன்னேற்ற கழக மாநில ஒருங்கிணைப்பாளர் கர்ணன் ஆப்பநாட்டு அறக்கட்டளை நிர்வாகி, கோபால் பாண்டியன் அவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.