பள்ளிகளை திறப்பது தற்போது சாத்தியப்படாது – அமைச்சர் செங்கோட்டையன்!

0
71

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. ஏனென்றால், கொரோனா என்ற நோய் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. 

அதுமட்டுமன்றி இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் செயல் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் மாணவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் மூலமே ஆசிரியர்கள் தங்களின் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள லக்கம்பட்டி என்ற பேரூராட்சியில், மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த மேல்நிலை தொட்டி கட்டுவதற்கு 1 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவாகுமாம். மேலும் இந்த மேல்நிலை தொட்டி மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

இந்த பூஜையில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது : “பள்ளிகளை திரப்பதற்கான சூழல் தற்போது சாத்தியமாக இல்லை” என்பதை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K