ஐப்பசி மாத பௌர்ணமி நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் மூலவரான பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசியால் ஆன அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளன்று சிவன் கோயிலில் உள்ள சுவாமிக்கு அன்னாபிஷேகம் விழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தஞ்சை பெருவுடையார் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டது.
பவுர்ணமியான நேற்று, பெரிய கோவிலில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவதற்காக , பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசி ,500 கிலோ காய்கறிகள், 250 கிலோ மலர்கள் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆயிரம் கிலோ அன்னம், 13 முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுடன், பழங்களும் சேர்த்து சுவாமியை அலங்காரம் செய்தனர்.
இந்த திருக்கோலத்தைக் காண திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.