பயங்கர குஷியில் ரஜினி ரசிகர்கள்! முக்கிய முடிவை அறிவித்த ரஜினிகாந்த்!

0
145

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் பிரவேசம் செய்வதிலிருந்து பின்வாங்கி இருக்கின்றார் எனவும், நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவார் எனவும் இரு கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், பரவி வருகின்றது.

இந்த நிலையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இப்போது வேலூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில், ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

வேலூர் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரொட்டியில், பூ பாதையா? சிங்கப் பாதையா? மக்களின் உதிரத்தை உறிஞ்சும் கழுகு கூட்டத்தை வேட்டையாட சிங்கப் பாதையில்தான் போக வேண்டும். எங்களுடைய ஓட்டுக்கள் ரஜினி அவர்களுக்கு மட்டுமே என்றும், மாற்றத்தை எதிர்பார்க்கும் வேலூர் பொதுமக்கள் எனவும், அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த சுவரொட்டியில் புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Previous articleஅரசிற்கு எதிராக திரும்பிய விவசாயிகள்! ஸ்தம்பிக்கபோகும் தமிழகம்!
Next articleதனிமைப்படுத்திக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர்!