தனிமைப்படுத்திக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர்!

0
93

உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று உள்ள நபருடன் தொடர்பு கொண்டதால் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

https://twitter.com/DrTedros/status/1323032927492542465?s=20
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் என்னுடன் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. நான் நலமுடன் உள்ளேன். எனக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வீட்டிலிருந்தே எனது பணிகளை செய்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K