விலை உயர்வை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!

0
148

புதிதாக அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டத்தினால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வாறு ஏற்பட்ட விலை உயர்வை தடுக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக கட்சி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவரின் அறிக்கையில்,  பண்டிகை காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத்தினால், அத்தியாவசிய பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று பெரிய நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாய பெருமக்களும், அவர்களின் குடும்பமும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி பொதுமக்களை அவற்றிலிருந்து காக்கவும் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி கேரளா மாநிலத்தின் அரசை போல தமிழகத்திலும் காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயிக்கும் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article‘மக்கள் நீதி மய்யம்’ ஆலோசனை கூட்டம் – கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது!
Next articleபாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக மாயாவதி அதிரடி அறிவிப்பு!