பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக மாயாவதி அதிரடி அறிவிப்பு!

0
117

உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டமேலவை தேர்தல் நடைபெற இருக்கும் காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியை தோற்கடிப்பதற்காக பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக இருப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார். ஏனெனில் சமாஜ்வாதி கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.

மேலும் நடக்க இருக்கின்ற “சட்டமேலவை தேர்தலில், தேவைப்பட்டால் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராய், பாஜக வேட்பாளருக்கோ அல்லது வேறு எந்த கட்சி வேட்பாளருக்கோ வேண்டுமானாலும் ஆதரவு அளிக்க தயார்” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிலை உயர்வை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!
Next articleஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக முதல்வர்! கொடுக்கப்போகும் மிகப்பெரிய பரிசு!