விவசாய பெருமக்கள் கோரிக்கை..! முதல்வர் உத்தரவு!

0
127

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக வரும் 5ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

https://twitter.com/CMOTamilNadu/status/1323580440683319296?s=20

இதனால் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள 802.93 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனா தொற்று பரவலின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
Next articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்!